குரு

குரு

குரு என்பவர் சுயநலம் இல்லாதவர், தன்னலம் இல்லாதவர், பிறர் நலம் காண்பவர், உண்மையை அறிந்தவர், உலகில் நமக்காக வாழ்பவர், நம் குறைகளை தீர்ப்பவர், ஊழ்வினை அகற்றுபவர், கர்மாக்களை வாங்குபவர், நான், எனது என்ற சொல் சொல்லாதவர், மெய் வழியை காட்டுபவர், பொய் இல்லாத நிலையை அடைந்தவர், வாழ்க்கையில் வழிகாட்டினவர், உன்னை உனக்கு நீ யார் என அறிமுகப்படுத்துபவர், தான் யார் என காட்டியவர், எல்லாம் பரப்பிரம்மமே என்று சொல்லக்கூடியவர், அதுதான் இது, இதுதான் அது, என கடைசி நிலையையும் காண்பிக்க கூடியவர்.

அர்த்தமுள்ள அழுகையும், அர்த்தமற்ற சிரிப்பையும் தனக்குள் காட்டுபவர், எந்நிலையிலும் தன்னிலை இழக்காதவர், எந்நிலையில் இருந்தாலும் நமக்காக தன் நிலை இறங்கி வரக்கூடியவர், வாழ்க்கை இதுதான் என காட்டியவர், சிந்தையில் நாடிவரும் குழந்தைகளையே கவனிக்க கூடியவர், இருளைப் போக்கி ஒளியைக் காட்டியவர், நிரந்தரமானது எது என உணர்த்தக்கூடியவர்,எல்லாம் ஒன்றே என்று உணர்த்தியவர், தனிமையில் இருக்கக்கூடியவர், தனிமையிலும் இனிமையான பரம்பொருளே என வாழ்பவர். இதை நமக்காக செய்யக்கூடியவர்.

தன் திருவடியை உண்மையாகப் பற்றிய எந்த குழந்தையையும் கீழே தள்ளாதவர்.

 

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிரம்மேந்திராள்